நிகழும் 2024 ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியாவின் 2024 ஆம் நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 6.2% ஆக கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இது 6.7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என கணிப்பதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில், சர்வதேச வளர்ச்சி விகிதம் 2.9% ஆக சரியும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, 2024 ஆம் நிதி ஆண்டின் முதல் இரு காலாண்டுகளில் அதிக வளர்ச்சி பதிவு செய்யப்பட்ட நிலையில், அடுத்த இரு காலாண்டுகளில் சரிவு காணப்படும் என கூறியுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியும் இதே போன்ற வளர்ச்சிக் கணிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.