இன்று காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு பதிவாகும் மிகக் குறைந்த தினசரி பாதிப்பு ஆகும். மத்திய சுகாதார அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய நிலவரப்படி, நாட்டில் சிகிச்சை பெற்று வரும் மொத்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1844 ஆக உள்ளது. மேலும், இதுவரையில் கொரோனா காரணமாக உயிர் இழந்தோர் எண்ணிக்கை 5.31 லட்சமக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையும் விகிதம் 98.81% ஆக உயர்ந்துள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில், இந்தியாவில் 220.66 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதித்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4.44 கோடியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தற்போதைய கொரோனா பாதிப்பில் உயிரிழக்கும் விகிதம் 1.18% அளவில் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.