யாகி புயல் காரணமாக பாதிக்கபட்ட மியான்மர், வியட்நாம், லாவோசுக்கு இந்தியா நிவாரணம் வழங்கியுள்ளது.
பிலிப்பைன்சில் உருவான யாகி புயல், வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசை தாக்கிய நிலையில், வியட்நாமில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மியான்மரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 74 பேர் பலியாகியுள்ளனர். இந்தியா, இந்த நாடுகளில் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை ஆபரேஷன் சத் பவ் திட்டம் மூலம் அனுப்பியுள்ளது. இந்த நிவாரணத்தில் உணவுகள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் குழந்தை உணவுகள் உள்ளன.