இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 117 நாட்களுக்கு பிறகு, தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 600 க்கு மேல் பதிவாகியுள்ளது. மேலும், நாட்டில் மொத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4197 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கைப்படி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 618 புதிய கொரோனா பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கர்நாடகா மாநிலத்தில் இருவரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருவரும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒருவரும், கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, இந்த ஐவரையும் சேர்த்து, நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்புகள் 530789 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில், கொரோனாவில் இருந்து குணமாகும் விகிதம் 98.8% ஆக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.