சீன குடிமக்களுக்கு இந்தியா சுற்றுலா விசா மீண்டும் தொடக்கம்

July 24, 2025

கொரோனா தாக்கம் காரணமாக சீனாவுக்கு விதிக்கப்பட்ட சுற்றுலா விசா தடையை இந்தியா நீக்கியுள்ளது. ஜூலை 24 முதல் சீனர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020ல் கொரோனா பரவலின் போது சீனாவில் இருந்து இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தடையிட்டு, பின்னர் சீன அரசு இந்திய மாணவர்களுக்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து சுற்றுலா விசாக்கள் இடைநிறுத்தப்பட்டன. தற்போது, இருநாடுகளும் எல்லைப் பிரச்சனைகளில் பதற்றம் குறைக்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதனடிப்படையில் இந்திய தூதரகம், சீன குடிமக்களுக்கு […]

கொரோனா தாக்கம் காரணமாக சீனாவுக்கு விதிக்கப்பட்ட சுற்றுலா விசா தடையை இந்தியா நீக்கியுள்ளது. ஜூலை 24 முதல் சீனர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2020ல் கொரோனா பரவலின் போது சீனாவில் இருந்து இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தடையிட்டு, பின்னர் சீன அரசு இந்திய மாணவர்களுக்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து சுற்றுலா விசாக்கள் இடைநிறுத்தப்பட்டன. தற்போது, இருநாடுகளும் எல்லைப் பிரச்சனைகளில் பதற்றம் குறைக்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதனடிப்படையில் இந்திய தூதரகம், சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்க ஜூலை 24 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இது இருநாடுகளிடையே உறவு மேம்பட வழிவகுக்கும் முக்கியமான படியாகவும் பார்க்கப்படுகிறது. SCO வெளியுறவுக் கூட்டத்தில் இந்திய பங்கேற்பும் இதனை உறுதி செய்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu