இந்தியா - ரஷ்யா இடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியா - ரஷ்யா இடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக ரஷ்ய மந்திரி கூறுகையில் இந்திய - ரஷ்யா இடையிலான பயணத்தை எளிதாக்க இரு நாடுகளுக்கு இடையே விசா இன்றி பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலா உறவுகள் வலுப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது