உலகளாவிய உறவுகளில் இந்தியா – ரஷ்யா இடையேயான உறவானது நிலையானது என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. எனினும் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மென்டுரோ 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இதனை தொடர்ந்து டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் துணை பிரதமர் டெனிஸ் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், பல்வேறு துறைகளில் இரு நாட்டின் ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உலகளாவிய உறவுகளில் இந்தியா-ரஷ்யா உறவானது நிலையான ஒன்றாகும். இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வு அவசர அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.