இந்தியா -ரஷ்யா இடையே கூடங்குளம் ஒப்பந்தம்

December 27, 2023

தமிழகத்தில் உள்ள கூடன்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அணு உலைகள் தொடர்பாக இந்தியா ரஷ்யா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மான்ட்ரோவை சந்தித்து பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அணுமின் நிலையம், மருந்து பொருட்கள், மருத்துவ கருவிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையொப்பமானது. இது குறித்து ஜெய்சங்கர் கூறுகையில் […]

தமிழகத்தில் உள்ள கூடன்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அணு உலைகள் தொடர்பாக இந்தியா ரஷ்யா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மான்ட்ரோவை சந்தித்து பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அணுமின் நிலையம், மருந்து பொருட்கள், மருத்துவ கருவிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையொப்பமானது. இது குறித்து ஜெய்சங்கர் கூறுகையில் இந்த சந்திப்பின்போது கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கான எதிர்கால அணு உலைகள் குறித்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அணுமின் உற்பத்தி, விண்வெளி ஆகிய துறைகளில் சிறந்த கூட்டாளியாக ரஷ்யா உள்ளது. இந்தியா - யுரேஷியா பொருளாதார மண்டலத்துக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் ரஷ்ய உதவியுடன் கடந்த 2002இல் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டது. ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட முதலாவது அணு உலை 2016 முதல் செயல்பட்டு வருகிறது. இது 2027 முதல் முழு அளவில் செயல்படும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu