இந்தியாவின் நவம்பர் மாத மின் நுகர்வு 14% உயர்வு

December 2, 2022

இந்தியாவின் நவம்பர் மாத மின் நுகர்வு 13.6% உயர்ந்து, 112.81 பில்லியன் யூனிட்களாக உள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியாவின் மின் நுகர்வு மற்றும் மின் தேவை, இனி வரும் மாதங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இனி வரும் மாதங்கள், இந்தியாவில் குளிர் காலம் என்பதால், ஹீட்டர் பயன்பாடு அதிகரிக்கும் என்பதாலும், ராபி பயிர்கள் சாகுபடி சமயம் என்பதாலும், மின் நுகர்வு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், நாட்டின் அதிகபட்ச […]

இந்தியாவின் நவம்பர் மாத மின் நுகர்வு 13.6% உயர்ந்து, 112.81 பில்லியன் யூனிட்களாக உள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியாவின் மின் நுகர்வு மற்றும் மின் தேவை, இனி வரும் மாதங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இனி வரும் மாதங்கள், இந்தியாவில் குளிர் காலம் என்பதால், ஹீட்டர் பயன்பாடு அதிகரிக்கும் என்பதாலும், ராபி பயிர்கள் சாகுபடி சமயம் என்பதாலும், மின் நுகர்வு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில், நாட்டின் அதிகபட்ச மின் தேவை, ஒரு நாளைக்கு 187.38GW ஆக பதிவாகியுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டுகளில், 166.10 GW, 160.77 GW மற்றும் 155.32 GW ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மின் நுகர்வு அதிகரித்துள்ளது, நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறி என்று சொல்லப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu