இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், குளோபல் டேட்டா என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மொத்த பரிவர்த்தனைகள் 58.1% யு பி ஐ மூலம் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரொக்கப் பண பரிமாற்றத்துக்கு மாற்றாக டிஜிட்டல் பண பரிமாற்றம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு 20.4% அளவில் இருந்த யு பி ஐ பரிமாற்றம், 2023 ஆம் ஆண்டு 58.1% ஆக உயர்ந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு தெற்காசிய நாடுகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருவதாக குளோபல் டேட்டா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.