கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.87% ஆக பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு மாதமும், தேசிய புள்ளியியல் அலுவலகம் பணவீக்கம் தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4 மாத குறைவான பதிவை எட்டியுள்ளது. தொடர்ந்து 2வது மாதமாக, மத்திய ரிசர்வ் வங்கியின் 2 முதல் 6% வரம்புக்குள் நீடித்து வருகிறது. குறிப்பாக, உணவு பணவீக்கம் 6.61% ஆக சரிந்துள்ளது. மாநிலங்கள் அடிப்படையில், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி ஆகியவை 2% அளவில் சில்லறை பணவீக்கத்தை பதிவு செய்துள்ளன. அதே சமயத்தில், ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்கள் 6% க்கும் மேலாக சில்லறை பணவீக்கத்தை பதிவு செய்துள்ளன.