இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 694.96 புள்ளிகள் சரிந்து, 61054.29 ஆக நிலை கொண்டுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 186.8 புள்ளிகள் சரிந்து, 18069 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. நேற்றைய வர்த்தக நாளில் ஏற்றமடைந்த பங்குச் சந்தை, இன்று மிகவும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டைட்டன் பங்குகள் 2.34% உயர்ந்துள்ளன. டைட்டன் தவிர, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி, நெஸ்லே, ஹீரோ மோட்டோகார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல் நிறுவனங்கள் ஏற்றத்தை பதிவு செய்துள்ளன. அதே வேளையில், எச்டிஎப்சி வங்கி 5.91% இழப்பை பதிவு செய்துள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி தவிர, ஹெச்டிஎஃப்சியின் ஹவுசிங் டெவலப்மெண்ட் பிரிவு 5.58% இழப்பை சந்தித்துள்ளது. அதைப்போலவே, இண்டஸ்இண்ட் வங்கி, ஹிந்தால்கோ, டாடா ஸ்டீல், மஹிந்திரா நிறுவனங்கள் இழப்பை பதிவு செய்துள்ளன.