உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தொடர்ந்து ஏழு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 37வது லீக் ஆட்டம் நாளை மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் போட்டியிட உள்ளன. இதில் இந்தியா அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை நடைபெற உள்ள போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுமா என்னும் ஆவல் எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி ஏழு ஆட்டத்தில் ஆறு வெற்றி ஒரு தோல்வியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி உறுதி செய்யப்பட்டு விடும். இரு அணிகளுக்கு இடைேயான ஆட்டம் நாளை மிகவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.