இந்தியா - இலங்கை கூட்டு ராணுவ பயற்சி

August 13, 2024

இலங்கை - இந்தியா இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி நேற்று தொடங்கியது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை - இந்தியா இடையே மித்ரா சக்தி கூட்டு ராணுவ பயிற்சி நேற்று தொடங்கியது. இலங்கையின் மதுரு ஓயாவில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் இந்த பயிற்சி ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பாக ரஜபுத்தன ரைபிள் படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் பிற ஆயுதப்படை வீரர்களும் […]

இலங்கை - இந்தியா இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி நேற்று தொடங்கியது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை - இந்தியா இடையே மித்ரா சக்தி கூட்டு ராணுவ பயிற்சி நேற்று தொடங்கியது. இலங்கையின் மதுரு ஓயாவில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் இந்த பயிற்சி ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பாக ரஜபுத்தன ரைபிள் படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் பிற ஆயுதப்படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 106 இந்திய வீரர்கள் பயிற்சியில் பங்கு பெற்றுள்ளனர். இலங்கை சார்பில் கஜபா படை பிரிவு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இரு நாடுகளின் கூட்டு ராணுவ திறனை மேம்படுத்த இது மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu