இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தில், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவை போற்றும் வகையில் இலச்சினை வெளியிடப்பட்டது. இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நட்புறவு மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், ஒத்துழைப்பை பலப்படுத்தும் நோக்கிலும், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, பால்வளத் துறையில், இந்தியாவின் பால்வள மேம்பாட்டு வாரியம், அமுல் ஆகிய நிறுவனங்கள் இலங்கையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.