உலக அளவில் ஐபிஓ வெளியீடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு, இந்தியாவின் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் மொத்தம் 31 ஐபிஓ நிகழ்ந்துள்ளது. பல்வேறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடந்த ஆண்டில் பொது பங்கீட்டுக்கு வெளியாகி உள்ளன. இந்திய பங்குச் சந்தையின் பொது பங்கீட்டு அளவை உலக அளவில் ஒப்பிடுகையில், இந்தியா முன்னிலையில் உள்ளதாக பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான இ ஒய், அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. மேலும், நிகழாண்டிலும் இந்திய பங்குச் சந்தையில் அதிக எண்ணிக்கையிலான பொது பங்கு வெளியீடுகள் நிகழும் என கூறியுள்ளது. பங்கு வெளியீடு அனுமதிக்காக அதிக அளவில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.