ஆகாஷ் மற்றும் பிரித்வி, அக்னி ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா இன்று மூன்று முக்கியமான ஏவுகணைகளை சோதனை செய்தது. லடாக்கில், 4,500 மீ தூரத்திலுள்ள இலக்கை தாக்கும் “ஆகாஷ் பிரைம்” ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது, ஆகாஷ் மார்க்-I மற்றும் ஆகாஷ்-1S ஆகியவற்றின் மேம்பட்ட வடிவமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து, குறுகிய தூரத்திற்கான பிரித்வி-II மற்றும் அக்னி-I ஏவுகணைகளும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. மூன்றும் இலக்கை துல்லியமாக தாக்கியதால் பாதுகாப்பு துறையில் மிக முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.