சந்திரயான் 3 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இந்தியாவின் மூன்றாவது மற்றும் மிகப்பெரிய நிலவு திட்டமாக சந்திரயான் 3 உள்ளது. இந்த விண்கலம் இன்று மதியம் 2:35 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. எல் வி எம் 3 எம் 4 ராக்கெட், சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து சென்றது. பூமியிலிருந்து 179 கிலோமீட்டர் தொலைவில், விண்கலம் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான் 3 திட்டமிட்டபடி பயணித்து வருவதாக கூறிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், […]

இந்தியாவின் மூன்றாவது மற்றும் மிகப்பெரிய நிலவு திட்டமாக சந்திரயான் 3 உள்ளது. இந்த விண்கலம் இன்று மதியம் 2:35 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. எல் வி எம் 3 எம் 4 ராக்கெட், சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து சென்றது. பூமியிலிருந்து 179 கிலோமீட்டர் தொலைவில், விண்கலம் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

சந்திரயான் 3 திட்டமிட்டபடி பயணித்து வருவதாக கூறிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இந்த திட்டத்தின் முதல் அடியான சுற்றுவட்ட பாதை நிலைநிறுத்தம் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளதாக” மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், எதிர்கால திட்டங்களும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார். சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu