கடந்த ஜூலை மாதத்தில், சீனாவை பின்னுக்குத் தள்ளி ரஷ்யாவின் முதன்மை இறக்குமதியாளராக இந்தியா மாறியுள்ளது. ஜூலையில், நாள் ஒன்றுக்கு 2.07 மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா மேற்கொண்டுள்ளது. அதே சமயத்தில், சீனா நாள் ஒன்றுக்கு 1.76 மில்லியன் பேரல் எண்ணெய் இறக்குமதியை பதிவு செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 44% ரஷ்யாவிடம் இருந்து பதிவாகியுள்ளது. முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.2% உயர்வாகவும், முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 12% உயர்வாகவும் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இந்தியாவின் மற்ற கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்களாக உள்ளன. இவர்களிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு 4% உயர்ந்துள்ளது.