யுபிஐ - பிராம்ட் பே இணைப்பு குறித்து இந்தியா, தாய்லாந்து பரிசீலனை

April 21, 2023

இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறைக்கும், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பிராம்ட் பே முறைக்கும் இடையில், வர்த்தக உறவை ஏற்படுத்த இரு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன. நேற்று, இது தொடர்பான அறிவிப்பை இந்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இரு நாடுகளும் உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் வர்த்தகத் துறை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், யுபிஐ மற்றும் பிராம்ட் […]

இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறைக்கும், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பிராம்ட் பே முறைக்கும் இடையில், வர்த்தக உறவை ஏற்படுத்த இரு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன. நேற்று, இது தொடர்பான அறிவிப்பை இந்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இரு நாடுகளும் உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் வர்த்தகத் துறை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், யுபிஐ மற்றும் பிராம்ட் பே தளங்களை இணைப்பதில் ஏற்படும் தொழில்நுட்ப சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தாய்லாந்து, இந்தியாவின் முக்கிய வர்த்தக உறவு நாடாகும். தற்போதைய நிலையில், இந்தியா தாய்லாந்து இடையே 16.89 பில்லியன் டாலர்கள் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. எனவே, இருநாட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களையும் இணைப்பதற்கு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu