கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா (AUKUS ) இடையே AUKUS ஒப்பந்தம் கையெழுத்தானது.அதன்படி ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறவுள்ளது. இதனால் கோபமடைந்துள்ள சீனா அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) கீழ் இது மீறல் என்று கூறியுள்ளது.
ஆஸ்திரேலியா அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. செப்டம்பர் 26-30 வரை நடந்த IAEA இன் பொது மாநாட்டில் மற்ற நாடுகள் சீனாவிற்கு ஆதரவளிக்க மறுத்ததால் சீனா தீர்மானத்தை வாபஸ் பெற்றது. ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு உடன்படிக்கைக்கு IAEA வில் சீனாவைத் தவிர அனைத்து நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. வியன்னா சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) கூட்டத்தில் AUKUS எதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றும் சீனாவின் முயற்சியை இந்தியா முறியடித்துள்ளது. இந்தியாவின் திறமையான இராஜதந்திரம் IAEA உறுப்பு நாடுகளால் பாராட்டப்பட்டது. வியன்னாவில் உள்ள IAEAவுக்கான இந்திய தூதரகம், இப்பிரச்சினையில் மற்ற IAEA உறுப்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றியதாக புகழப்பட்டது.