சோமாலியா கடற்கொள்ளையர்களால் இலங்கை மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கு இந்தியா உதவுவதாக அறிவித்துள்ளது.
கடந்த 16ஆம் தேதி, இலங்கையின் மீன்பிடி படகை சோமாலியா நாட்டின் கடற் கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். இதில் இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்கள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் இலங்கை அரசுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த, சோமாலிய கடற்கொள்ளையர்கள் அனுமதி வழங்கியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசு, மீனவர்களை விடுவிப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. அதன்படி, இலங்கைக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது. இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் கயான் விக்ரமசூரிய இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.














