இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% - உலக வங்கி கணிப்பு

June 12, 2024

நடப்பு நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% அளவில் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில், 2025 ஆம் நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.4 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. இது, தற்போது 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6.6% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் அதிகரித்துள்ள முதலீடுகள் மற்றும் நுகர்வோர் தேவையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றால் கணிப்பை உயர்த்துவதாக உலக வங்கி […]

நடப்பு நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% அளவில் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில், 2025 ஆம் நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.4 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. இது, தற்போது 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6.6% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் அதிகரித்துள்ள முதலீடுகள் மற்றும் நுகர்வோர் தேவையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றால் கணிப்பை உயர்த்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது என தெரிவித்துள்ளது. எனவே, 2026 ஆம் நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை 6.5% ல் இருந்து 6.7% ஆக உயர்த்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu