சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம், ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வருடாந்திர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியா 11% ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து சர்வதேச அளவிலான ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
கடந்த 2013-17-ம் ஆண்டுகளில் இந்திய ஆயுத இறக்குமதியில் 64 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்தது. கடந்த 2018-22-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் ரஷ்ய ஆயுத இறக்குமதி 45% ஆக குறைந்திருக்கிறது.