இந்தியா- ஐக்கிய அரபு இடையே ரூ.8.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம்

June 13, 2023

இந்தியா- யுஏஇ இடையே ரூ.8.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்சு, இந்தியா இடையே எண்ணெய் அல்லாத வர்த்தகம் தற்போது ரூ.3 லட்சத்து 95 ஆயிரம் கோடியாக உள்ளது. இதனை வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.8.25 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இது தொடர்பாக யுஏஇ நாட்டின் வெளிநாட்டு வர்த்தக […]

இந்தியா- யுஏஇ இடையே ரூ.8.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்சு, இந்தியா இடையே எண்ணெய் அல்லாத வர்த்தகம் தற்போது ரூ.3 லட்சத்து 95 ஆயிரம் கோடியாக உள்ளது. இதனை வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.8.25 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இது தொடர்பாக யுஏஇ நாட்டின் வெளிநாட்டு வர்த்தக துறை அமைச்சர் பின் அகமது அல் ஸெயோதி பேசுகையில், மின்சக்தி,வளர்ந்து வரும் தொழில்நுட்பம், திறன்கள், கல்வி, உணவு, மருத்துவம், பாதுகாப்பு மற்றும் ஸ்டார்ட் அப் துறைகளில் முதலீடுகளை செய்ய யுஏஇ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu