தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடர இந்தியா- இங்கிலாந்து முடிவு

February 27, 2023

தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடர இந்தியா- இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை கடந்த அக்டோபருக்குள் இறுதி செய்ய முந்தைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தரவுகளை உள்ளூர்மயமாக்குதல், இங்கிலாந்து நிறுவனங்களை ஒன்றிய அரசின் ஒப்பந்தங்களை ஏலம் எடுக்க அனுமதிப்பது ஆகியவற்றில் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் ஜி-20 நாடுகளில் நிதியமைச்சர்களின் மாநாடு சமீபத்தில் பெங்களூருவில் நடந்தது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த மாநாட்டில் […]

தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடர இந்தியா- இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை கடந்த அக்டோபருக்குள் இறுதி செய்ய முந்தைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தரவுகளை உள்ளூர்மயமாக்குதல், இங்கிலாந்து நிறுவனங்களை ஒன்றிய அரசின் ஒப்பந்தங்களை ஏலம் எடுக்க அனுமதிப்பது ஆகியவற்றில் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் ஜி-20 நாடுகளில் நிதியமைச்சர்களின் மாநாடு சமீபத்தில் பெங்களூருவில் நடந்தது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த மாநாட்டில் இங்கிலாந்தின் நிதியமைச்சர் ஜெர்மீ ஹன்ட் கலந்து கொண்டார்.

இதுகுறித்து இங்கிலாந்து நிதித்துறை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஜெர்மீ ஹன்ட் பேச்சுவார்த்தை நடத்தினார். இங்கிலாந்து- இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை முன்னோக்கி எடுத்து செல்வதற்கு இரு தரப்பும் ஒப்பு கொண்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu