சரக்கு போக்குவரத்து இயக்கத்திறனை வலுப்படுத்த இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவாா்த்தை

September 28, 2023

இந்தியா-அமெரிக்கா இடையே சரக்கு போக்குவரத்து இயக்கத்திறனை வலுப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள செய்தியில்,' இந்தியா அமெரிக்கா இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ராணுவம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், தூய்மை எரிசக்தி, விநியோக சங்கிலி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் பரஸ்பர சரக்கு போக்குவரத்து மற்றும் இயக்கத் திறனை வலுப்படுத்த உள்ள வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஒருங்கிணைந்த கடல் சார் […]

இந்தியா-அமெரிக்கா இடையே சரக்கு போக்குவரத்து இயக்கத்திறனை வலுப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள செய்தியில்,' இந்தியா அமெரிக்கா இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ராணுவம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், தூய்மை எரிசக்தி, விநியோக சங்கிலி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் பரஸ்பர சரக்கு போக்குவரத்து மற்றும் இயக்கத் திறனை வலுப்படுத்த உள்ள வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஒருங்கிணைந்த கடல் சார் பாதுகாப்பு, விண்வெளி, பிராந்திய பாதுகாப்பு குறித்தும் இதற்கான முன்னெடுப்புகள் எந்த அளவுக்கு செயல்பட்டு வருகின்றன என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு தளவாட கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் விநியோக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகளை விரைவில் இறுதி செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu