ஐநா சபையில் பகுதியில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வாக்கு அளித்துள்ளது.
இந்த தீர்மானத்துக்கு பிரான்ஸ், ஜப்பான், இந்தியா உள்பட 145 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.அதே சமயத்தில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை கோரும் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. பாலஸ்தீன பிரச்சினை உட்பட மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பாக கடந்த நவம்பர் 9ஆம் தேதி ஐநா சபையில் 6 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. ஐநா சபையின் அரசியல் மற்றும் காலணி ஆதிக்கத்திற்கு எதிரான விவகாரங்களை கையாளும் விவகாரங்களுக்கான சிறப்பு குழு இந்த தீர்மானங்களை ஏற்றுக் கொண்டது. சிரியாவின் கோலன் பிராந்தியத்தில் இஸ்ரேல் நடவடிக்கைகளுக்கு தடை, பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநாவின் நிவாரண செயல்பாடுகள், உதவிகள் உள்ளிட்ட தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இஸ்ரேல் ஹமாஸ் போரை மனிதாபிமான அடிப்படையில் நிறுத்தக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியா பங்கேற்கவில்லை.