"2047ல் இந்தியா உயர் நடுத்தர வருவாய் கொண்ட நாடாகும்": பிபேக் டெப்ராய்

September 1, 2022

2047க்குள் இந்தியா உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாறும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பிபேக் டெப்ராய் தெரிவித்தார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு நூறாவது சுதந்திர ஆண்டில் இந்தியாவிற்கான போட்டித்திறன் திட்டங்கள் என்ற தலைப்பில் நூலினை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா தனது 100வது சுதந்திர ஆண்டை நிறைவு செய்வதற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் லட்சிய இலக்கை பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ளார். அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உலக வங்கியின் வரையறையின்படி, […]

2047க்குள் இந்தியா உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாறும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பிபேக் டெப்ராய் தெரிவித்தார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு நூறாவது சுதந்திர ஆண்டில் இந்தியாவிற்கான போட்டித்திறன் திட்டங்கள் என்ற தலைப்பில் நூலினை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா தனது 100வது சுதந்திர ஆண்டை நிறைவு செய்வதற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் லட்சிய இலக்கை பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ளார். அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

உலக வங்கியின் வரையறையின்படி, எந்தவொரு நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் 9 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளதோ அந்நாடு அதிக வருமானம் கொண்ட வளர்ந்த நாடாகக் கருதப்படுகிறது.

திட்ட வெளியீட்டு விழாவில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பிபேக் டெப்ராய் பேசுகையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு 7 முதல் 7.5 சதவீத நிலையான வளர்ச்சி விகிதத்தை எட்டினால், இந்தியாவின் பொருளாதாரம் 20 லட்சம் கோடி டாலர் ஆக இருக்கும். இந்தியா தற்போது 2.7 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட நாடாக 6வது இடத்தில் உள்ளது.
2047ல் கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார அளவைப் பெறும்போது இந்தியா உயர் நடுத்தர வருமானப் பிரிவில் இருக்கும்.

மேலும், இந்தியாவுக்கு என்பது மாநிலங்களுக்கு என்ன நடக்கிறது என்பதற்கான ஒரு தொகுப்பாகும். மாநிலங்கள் தங்கள் வளர்ச்சியை உயர்த்தாத வரை இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் உயராது என்று அவர் கூறினார்.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu