உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும்: அமெரிக்கா

December 10, 2022

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று அமெரிக்காவின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்காவின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் கர்ட் கேம்ப்பெல், இந்திய - அமெரிக்க உறவு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா தனித்துவமான நாடு. அது அமெரிக்காவின் அணியில் இருக்கும் நாடாக இருக்காது. சுதந்திரமான, சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இந்தியாவுக்கு இருக்கிறது. விண்வெளி, கல்வி, காலநிலை மாற்றம், […]

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று அமெரிக்காவின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்காவின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் கர்ட் கேம்ப்பெல், இந்திய - அமெரிக்க உறவு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா தனித்துவமான நாடு. அது அமெரிக்காவின் அணியில் இருக்கும் நாடாக இருக்காது. சுதந்திரமான, சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இந்தியாவுக்கு இருக்கிறது. விண்வெளி, கல்வி, காலநிலை மாற்றம், தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும் இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகிறது என்றார்.
மேலும், அமெரிக்கா தனது சக்திக்கு அப்பாற்பட்டு இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவையும், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவதையும் மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu