பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களை கைப்பற்றி வெற்றியடைந்தது. இதில் பாரதிய ஜனதா 240 இடங்களை 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறது.
பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மொரிசியஸ், பூட்டான் நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நேபாள பிரதமர் புஷ்பகமல், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இலங்கை அதிபர் ரணில் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, பிரதமர் மோடியின் தலைமையில் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்றார்.
அதோடு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மிலோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இத்தாலிக்கும் இந்தியாவுக்குமான உறவை வலுப்படுத்த இந்திய அரசுடன் நெருக்கமாக பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார். தேர்தல் பணிகளை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக இந்தியாவுக்கு அமெரிக்க அரசும் பாராட்டு தெரிவித்துள்ளது.