வில்வித்தை, ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா

October 5, 2023

ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதல், வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. சீனாவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு பிரிவு இறுதிப் போட்டியில் ஜோதி சுரேகா வெண்ணம், அதிதி கோபிசந்த் சுவாமி மற்றும் பர்நீத் கவுர் அணி சீன தைபே உடன் மோதியது. இதில் 230-228 என்ற கணக்கில் […]

ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதல், வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
சீனாவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு பிரிவு இறுதிப் போட்டியில் ஜோதி சுரேகா வெண்ணம், அதிதி கோபிசந்த் சுவாமி மற்றும் பர்நீத் கவுர் அணி சீன தைபே உடன் மோதியது.
இதில் 230-228 என்ற கணக்கில் தங்கப்பதக்கம் வென்று இந்தியா அசத்தியுள்ளது.அதேபோல் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் பெற்றுள்ளது. இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா 88.88 மீட்டர் தூரமும், கிஷோர் ஜெனா 87.54 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். இதுவரை இந்தியா 83 பதக்கங்களை பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu