ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி படகு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி 2023 வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதில் மகளிர் Dinghy ILCA4 படகு போட்டியில் நேஹா தாகூர் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். 11 ரேஸ்களில் 27 புள்ளிகள் பெற்று இந்தியா வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது. இதில் தங்கப்பதக்கத்தை தாய்லாந்தும், வெண்கல பதக்கத்தை சிங்கப்பூரும் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி நான்கு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.