இலங்கை தூதர் மிலிண்டா மொராகோடா, இந்தியா மற்றும் கனடா நாட்டுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பேசி உள்ளார். இந்த விவகாரத்தில், இலங்கை இந்தியாவுக்கு ஆதரவு வழங்கும் என செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார். காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்தியா மற்றும் கனடா இடையே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மிலிண்டா மொராகோடா, “இலங்கை நாடு தீவிரவாதத்தால் பல சேதங்களை அனுபவித்துள்ளது. அந்த வகையில், தீவிரவாதத்தின் மீது எந்தவித சகிப்புத் தன்மையும் காட்டாது. அதன்படி, கனடா விவகாரத்தில், இந்தியாவின் நடவடிக்கைகள் சரியானதாக கருதப்படுகிறது. எனவே, இலங்கை இந்தியாவுக்கு ஆதரவு வழங்கும்” என தெரிவித்துள்ளார்.