வரும் நிதியாண்டில், இந்திய விமான நிலையங்களின் செயல்பாடுகள் மூலம் ஈட்டப்படும் வருவாய் 26% உயர்ந்து, 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. CAPA India என்ற நிறுவனம் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், 2023 - 24 ஆம் ஆண்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 395 மில்லியன் ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. மேலும், உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 275 மில்லியனில் இருந்து 320 மில்லியன் ஆக உயரும் என்றும், சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை 58 மில்லியனில் இருந்து 75 மில்லியன் ஆக உயரும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்கள் 700 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் பெற்றிருக்கும் என்று கூறியுள்ளது. அதே வேளையில், சர்வதேச விமான நிலையங்கள் 160 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளது.