அமெரிக்காவில் பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்த முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி என்ற பெருமையை சுஹாஷ் சுப்ரமணியம் பெற்றார்.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டிரம்ப் 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். இதன் பொருட்டு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இதில், கிழக்கு கடற்கரையில் இருந்து சென்று பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்த முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி என்ற பெருமையை சுஹாஷ் சுப்ரமணியம் பெற்றார். அவரது தாயார் நேரில் இதை காண வந்தார். இதுகுறித்து சுப்ரமணியம் கூறும்போது, விர்ஜீனியாவில் முதல் இந்திய-அமெரிக்க உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன் என்றார்.