லண்டன் - தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக இந்தியர் கைது

April 20, 2023

சுந்தர் நாகராஜன் என்ற 66 வயதுடைய, மதுரையைச் சேர்ந்த இந்தியர், லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஹிஸ்புல்லா என்ற தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. அதன் பெயரில் அவர் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து காவல்துறை இந்த தகவல்களை உறுதி செய்துள்ளது. லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா என்ற தீவிரவாத அமைப்பு, நசீம் அகமத் மற்றும் அவரது கூட்டு நிறுவனங்களின் உதவியுடன் தீவிரவாத செயல்களுக்கான நிதியை பெற்று வந்துள்ளது. நசீமின் சர்வதேச கணக்காளராக சுந்தர் […]

சுந்தர் நாகராஜன் என்ற 66 வயதுடைய, மதுரையைச் சேர்ந்த இந்தியர், லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஹிஸ்புல்லா என்ற தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. அதன் பெயரில் அவர் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து காவல்துறை இந்த தகவல்களை உறுதி செய்துள்ளது.

லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா என்ற தீவிரவாத அமைப்பு, நசீம் அகமத் மற்றும் அவரது கூட்டு நிறுவனங்களின் உதவியுடன் தீவிரவாத செயல்களுக்கான நிதியை பெற்று வந்துள்ளது. நசீமின் சர்வதேச கணக்காளராக சுந்தர் நாகராஜன் இருந்துள்ளார். எனவே, அவரை குற்றவாளியாக கருதுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முறையாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu