இந்தியாவின் உள்நாட்டு வாகன விற்பனை 9% உயர்வு

September 5, 2023

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவின் சில்லறை வாகன விற்பனை 9% உயர்வை பதிவு செய்துள்ளது. இந்திய வாகன டீலர்கள் அசோசியேஷன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த மாதத்தில், மொத்தமாக, 1818647 எண்ணிக்கையில் வாகன விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் வாகனத்திற்கான முன்பதிவு 7% உயர்ந்து, 315153 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகன விற்பனையில் 6% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த இருசக்கர வாகன விற்பனை 1254444 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. […]

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவின் சில்லறை வாகன விற்பனை 9% உயர்வை பதிவு செய்துள்ளது. இந்திய வாகன டீலர்கள் அசோசியேஷன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதத்தில், மொத்தமாக, 1818647 எண்ணிக்கையில் வாகன விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் வாகனத்திற்கான முன்பதிவு 7% உயர்ந்து, 315153 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகன விற்பனையில் 6% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த இருசக்கர வாகன விற்பனை 1254444 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. மேலும், வர்த்தக வாகனங்கள் விற்பனை 3% உயர்ந்து, 75294 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. டிராக்டர் விற்பனை 14% உயர்ந்து, 73849 ஆக பதிவாகியுள்ளது. இதர மூன்று சக்கர வாகன விற்பனையில் 66% உயர்வு பதிவாகி, 99907 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் மாதம், இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால், வாகன விற்பனையில் கணிசமான உயர்வு ஏற்படும் என கருதுவதாக, வாகன டீலர் அசோசியேஷன் தலைவர் மணிஷ் ராஜ் சிங்கானியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu