இந்தியன் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் இரு மடங்கு உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், வங்கியின் லாபம் 1396 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், வங்கியின் வருவாய் 13551 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் 25% உயர்ந்து, 5499 கோடியாக பதிவாகியுள்ளது. வங்கியின் என்பிஏ 6.53% ஆக குறைந்துள்ளது. மேலும், நிகர என்பிஏ 1% ஆக குறைந்துள்ளது.
வங்கியின் மொத்த வர்த்தகம் 9% வளர்ச்சியை பதிவு செய்து, 1048772 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில், 963007 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடன் வழங்கியதன் மூலம் ஏற்படும் இழப்பு கடந்த காலாண்டில் 1474 கோடியாக சரிந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2439 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.