பிரிட்டிஷ் அகாடமி விருது பெற்ற இந்திய எழுத்தாளர் நந்தினி தாஸ்

November 3, 2023

சர்வதேச கலாச்சாரங்களை தழுவி எழுதப்படும் சிறந்த நூல்களுக்கு பிரிட்டிஷ் அகாடமி விருது வழங்கி வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது, 2023 ஆம் ஆண்டில் இந்திய எழுத்தாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. “கோர்ட்டிங் இந்தியா: முகல் இந்தியா அண்ட் ஒரிஜின்ஸ் ஆஃப் த எம்பயர்” என்ற நூலுக்காக நந்தினி தாஸ் இந்த விருதை பெற்றுள்ளார். இந்தியாவில் பிறந்து வளர்ந்த நந்தினி தாஸ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது […]

சர்வதேச கலாச்சாரங்களை தழுவி எழுதப்படும் சிறந்த நூல்களுக்கு பிரிட்டிஷ் அகாடமி விருது வழங்கி வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது, 2023 ஆம் ஆண்டில் இந்திய எழுத்தாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. “கோர்ட்டிங் இந்தியா: முகல் இந்தியா அண்ட் ஒரிஜின்ஸ் ஆஃப் த எம்பயர்” என்ற நூலுக்காக நந்தினி தாஸ் இந்த விருதை பெற்றுள்ளார்.
இந்தியாவில் பிறந்து வளர்ந்த நந்தினி தாஸ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது நூலில், முகலாயர் ஆட்சி காலம், அப்போது நிகழ்ந்த ஆங்கிலேயர்கள் வருகை மற்றும் அதனைத் தொடர்ந்த இந்தியாவின் வரலாற்றை விளக்கி எழுதியுள்ளார். அவரது நூலில் இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகள் குறித்த புதிய பார்வைகளை அவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பிரிட்டன் அகாடமி விருதை வென்றுள்ள இந்த புத்தகம், 25 லட்ச ரூபாய் பரிசையும் வென்றுள்ளது. “சர்வதேச ஒற்றுமைக்கு உலகின் பல்வேறு கலாச்சாரங்களை தழுவி எழுதப்படும் நூல்கள் மிகவும் முக்கியமானவை. அந்த வகையில், பிரிட்டிஷ் அகாடமி இந்த விருதை 10 ஆண்டுகளாக வழங்கி வருகிறது” என பிரிட்டிஷ் அகாடமி தலைவர் பேராசிரியர் ஜூலியா பிளாக் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu