இந்திய மாணவர்களுக்கு சர்வதேச வங்கி சேவைகளை வழங்குவதற்காக கனடா மற்றும் இந்தியாவை சேர்ந்த வங்கிகள் புதிய கூட்டணியில் இணைந்துள்ளன. கனடாவைச் சேர்ந்த டொரன்டோ டோமினியன் வங்கி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை இணைந்து சர்வதேச வங்கி சேவைகளை வழங்க உள்ளன.
இருநாட்டு வங்கிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கூட்டணியை பற்றி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கனடா நாட்டு கல்வி நிறுவனங்களில் பயிலச் செல்லும் இந்திய மாணவர்களை டொரன்டோ டோமினியன் வங்கிக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி பரிந்துரை செய்யும். டொரன்டோ டோமினியன் வங்கி மாணவர்களுக்கு தேவைப்படும் ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்க துணை செய்யும். கனடாவில் தங்கி இருந்து கல்விப் பயிர்வதற்கு தேவையான நிதி சான்று எளிமையாக உறுதி செய்யப்படும். இந்தியாவின் வைப்பு நிதியை போல கனடாவில் GIC நிதி சான்றாக ஏற்கப்படும். அதனை டொரன்டோ டோமினியன் வங்கி மாணவர்களுக்கு முறைப்படுத்தி தரும்.