நம் ராணுவத்தின் முப்படைகளும் எப்போதும் உச்சகட்ட தயார் நிலையில் இருக்க வேண்டும் என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தெரிவித்தார்.
நம் நாட்டின் முப்படை தளபதிகள் பங்கேற்கும் மாநாடு புதுடில்லியில் கடந்த 7ல் துவங்கியது. இந்த மாநாட்டில் முப்படைகளின் தளபதிகள், படைப் பிரிவு தளபதிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள எல்லையில் நம் அண்டை நாடான சீனா தொடர்ந்து விஷமத்தனம் செய்து வருகிறது. இந்நிலையில், நம் படைகள் உச்சகட்ட தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து சீன அதிபர் ஜிங்பிங், நாட்டின் இறையாண்மை, மேம்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என ராணுவ வீரர்களிடையே பேசினார். இரு நாட்டு தலைவர்களும் தங்கள் ராணுவத்தை தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது எல்லை பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.