சீன யுவான் மூலம் இந்திய நிறுவனங்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி 

டாலருக்குப் பதிலாக சீன யுவான் மூலம் கச்சா எண்ணெயை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. உலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி- இறக்குமதி அனைத்திற்கும் அமெரிக்க டாலர் பயன்பாட்டை குறைத்து அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற அண்மைக்காலமாக சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உட்பட சில இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு யுவான் (Yuan) எனப்படும் சீன நாணயத்தில் பணம் செலுத்தத் தொடங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷிய […]

டாலருக்குப் பதிலாக சீன யுவான் மூலம் கச்சா எண்ணெயை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன.

உலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி- இறக்குமதி அனைத்திற்கும் அமெரிக்க டாலர் பயன்பாட்டை குறைத்து அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற அண்மைக்காலமாக சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உட்பட சில இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு யுவான் (Yuan) எனப்படும் சீன நாணயத்தில் பணம் செலுத்தத் தொடங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பினால் விதிக்கப்பட்ட சர்வதேச தடைகளின் ஒரு பகுதியாக டாலர்கள் மற்றும் யூரோக்களில் பரிமாற்றங்கள் கையாளப்படுவதற்கு அனுமதிக்கப்படாததால், யுவான் பயன்படுத்தப்பட தொடங்கியுள்ளது. எண்ணெய் இறக்குமதி மட்டுமல்லாது, இதே போல இந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தியாளரான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், அதன் நிலக்கரி இறக்குமதிக்கும் ஜூன் 2022-ல், யுவானில் பணம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu