இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5% அளவில் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
நிகழாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாகவும் சீராகவும் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியான நிதியத்தின் அறிக்கையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.6% அளவிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% அளவிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.1% அளவிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 2.1% மற்றும் அடுத்த ஆண்டில் 1.7% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை பொருளாதாரத்தில் வீழ்ச்சி கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.