இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.7% அளவில் இருக்கும் என பிரபல மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் கணித்துள்ளது.
நிகழும் 2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டு வரையில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6.7% வளர்ச்சி பதிவாகும் என கிரிசில் கணித்துள்ளது. இந்திய அரசின் மூலதன முதலீடு அதற்கான முக்கிய காரணமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. அத்துடன், 2027 ஆம் ஆண்டில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டும் என கூறியுள்ளது. அதன்படி, சர்வதேச அளவில், 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். அத்துடன், 2031 ல், 7 டிரில்லியன் டாலராக இந்திய பொருளாதாரம் உயரும் என கணித்துள்ளது, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலைகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றை இந்தியா கவனமாக கையாளும் பட்சத்தில் இந்த உயர்வு உறுதியாக நிகழும் என கிரிசில் தெரிவித்துள்ளது.














