லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் அங்கு வாழும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலில் உள்ள கோலன் பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் கடுமையான தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஜ்புல்லா இராணுவ தளபதி பௌத் சகர் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரு தரப்பிலும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். இதனால் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் அங்கு வாழும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், லெபனானில் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதனால் இந்தியர்கள் அங்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். லெபனானில் உள்ள இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது.