பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 6 பாதுகாப்புப்படையினர் பலி

September 21, 2024

பாகிஸ்தானில் பாதுகாப்பு சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 பாதுகாப்புப்படையினர் பலியாகினர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டம், மிஷ்தா கிராமத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு சோதனை சாவடியில் இன்று அதிகாலை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் குழு ஒன்று நடத்தியது. இந்த தாக்குதலில் 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் […]

பாகிஸ்தானில் பாதுகாப்பு சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 பாதுகாப்புப்படையினர் பலியாகினர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டம், மிஷ்தா கிராமத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு சோதனை சாவடியில் இன்று அதிகாலை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் குழு ஒன்று நடத்தியது. இந்த தாக்குதலில் 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதற்கான பொறுப்பை தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu