மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் இலக்கை இன்று எட்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்குச் சந்தையில், ஆரம்பம் முதலே ஏற்றம் பதிவாகி வந்தது. அந்த வகையில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு 33326881.49 கோடி ரூபாய் அளவில் இன்று காலை இருந்தது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 83.31 ஆக இருந்தது. எனவே, மொத்த ஈக்விட்டி சந்தை மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற இலக்கை முதல் முறையாக எட்டியுள்ளது. இந்திய ஈக்விட்டி சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலர்களில் இருந்து 1.5 ட்ரில்லியன் எட்ட 7 ஆண்டுகளும், அதன் பின்னர் 2.5 ட்ரில்லியன் எட்ட 6 ஆண்டுகளும் ஆகியுள்ளன. கடந்த 2020 டிசம்பரில் 2.5 டிரில்லியன் மதிப்பிலிருந்து தற்போது 4 ட்ரில்லியன் ஆக குறுகிய காலத்தில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.














