இந்திய திரைப்படங்களை உலகளவில் பிரபலப்படுத்தும் நோக்கில், இஸ்ரேலில் இந்திய திரைப்பட திருவிழா நேற்று தொடங்கியது. மார்ச் 8 வரை நடைபெறும் இந்த விழாவில், இந்தியாவில் பிரபலமான திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தொடக்க நாளில் கிரண் ராவ் இயக்கிய "லபதா லேடீஸ்" திரையிடப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும், "டங்கல்", "ஜிந்தகி நா மிலேகி தோபாரா", "மிமி", "இங்கிலிஷ் விங்கிலிஷ்", "777 சார்லி" போன்ற புகழ்பெற்ற படங்களும் திரையிடப்படும்.
இந்த விழா, இந்தியாவின் பன்முக கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் சமகால சவால்களை உலகிற்கு வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தியாவை சர்வதேச திரைப்பட தயாரிப்பு மையமாக உருவாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இஸ்ரேலில் நடைபெறும் இந்த திருவிழா முக்கியத்துவம் பெற்றுள்ளது.