பாகிஸ்தான் இந்திய விமானங்கள் தங்கள் வான் எல்லையை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது.
காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானுக்கு பல தடைகளை விதித்தது. இதற்குப் பதிலாக, பாகிஸ்தான் இந்திய விமானங்கள் தங்கள் வான் எல்லையை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இதனால் இந்திய விமானங்கள் ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. பயணிகள் சுமார் 1.5 முதல் 2 மணி நேரம் கூடுதலாக பயணிக்கின்றனர். கூடுதல் எரிபொருள் செலவு காரணமாக விமான நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதால், விமான கட்டண உயர்வு சாத்தியம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை முன்னிட்டு இண்டி கோ நிறுவனம் சில வெளிநாட்டு சேவைகளை 7-ந்தேதி வரை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் தடையின் நீட்சி, இந்திய விமானத் துறைக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது.